லிப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கி மும்பை ஆசிரியை பரிதாப பலி!

மும்பையில் பள்ளி ஒன்றில் லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கி 26 வயதேயான இளம் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மும்பை பகுதியில் மலாடில் உள்ள சிஞ்சோலி பண்டரில் இயங்கி வரும் செயின்ட் மேரிஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 26 வயதான ஜெனல் பெர்னாண்டஸ் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை (செப். 16) மதியம் 1 மணியளவில் ஆறாவது மாடியில் இருந்து 2வது மாடியில் உள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக பள்ளியில் உள்ள லிப்டில் ஏறியுள்ளார்.
Mumbai Teacher Gets Stuck Between Moving Lift Doors At School, Dies
ஆனால் லிப்டிற்குள் அவர் முழுமையாக செல்வதற்குமுன் அதன் கதவுகள் மூடத்துவங்கியுள்ளது. இதனால் லிப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கி அலறத் துவங்கினார் ஜெனல் பெர்னாண்டஸ். லிப்ட் கீழே நகரத் துவங்கியபோது பள்ளி ஊழியர்கள் அனைவரும் ஓடி வந்து அவருக்கு உதவ முயன்றுள்ளனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர் வெளியே இழுக்கப்பட்டார். பலத்த காயமுற்ற அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
26-year-old teacher killed in lift-mishap in Malad school - Cities News
முதற்கட்ட விசாரணையில் விபத்து நிகழ்ந்திருப்பதாக பதிவு செய்திருப்பதாகவும். அடுத்தகட்ட விசாரணையில் ஏதேனும் முறைகேடு இருப்பது தெரியவந்தால் அதன்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் மண்டலம் 11 இன் துணை போலீஸ் கமிஷனர் விஷால் தாக்கூர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.