சென்னை
:
தன்னுடைய
கனவு
பிராஜெக்டான
பொன்னியின்
செல்வன்
படத்தை
தன்னுடைய
மூன்றாவது
முயற்சியில்
சாத்தியப்படுத்தியுள்ளார்
மணிரத்னம்.
மணிரத்னத்தின்
மெட்ராஸ்
டாக்கிஸ்
மற்றும்
லைகா
இணைந்து
இந்த
பிரம்மாண்டமான
வரலாற்று
காவியத்தை
உருவாக்கியுள்ளது.
வரும்
30ம்
தேதி
சர்வதேச
அளவில்
மிகவும்
பிரம்மாண்டமான
அளவில்
படம்
திரையரங்குகளில்
ரிலீசாக
உள்ளது.
பொன்னியின்
செல்வன்
படம்
நடிகர்கள்
ஜெயம்
ரவி,
விக்ரம்,
கார்த்தி
உள்ளிட்டவர்கள்
நடிப்பில்
உருவாகியுள்ள
படம்
பொன்னியின்
செல்வன்.
இந்தப்
படம்
எம்ஜிஆர்,
கமல்
உள்ளிட்டவர்களின்
கைகளில்
இருந்து
மணிரத்னத்தின்
கைகளுக்கு
மாறியது.
அவரும்
விஜய்
உள்ளிட்டவர்களை
வைத்து
முன்னதாக
இந்தப்
படத்தை
இயக்க
இருமுறை
முயன்றார்.

14
நாட்களில்
ரிலீஸ்
இந்நிலையில்
தன்னுடைய
மூன்றாவது
முயற்சியில்
படத்தை
சாத்தியமாக்கியுள்ளார்
மணிரத்னம்.
இந்தப்
படத்தை
லைகாவுடன்
இணைந்து
தன்னுடைய
மெட்ராஸ்
டாக்கிஸ்
நிறுவனத்தின்
மூலம்
தயாரித்துள்ளார்.
படம்
வரும்
30ம்
தேதி
திரையரங்குகளில்
ரிலீசாக
உள்ளது.
ரிலீசுக்கு
இன்னும்
14
நாட்களே
உள்ளன.

அடுத்தடுத்த
அப்டேட்கள்
முன்னதாக
படத்தின்
டீசர்,
ட்ரெயிலர்,
பாடல்கள்
வெளியாகி
மிகுந்த
வரவேற்பை
பெற்றுள்ளன.
தொடர்ந்து
போஸ்டர்கள்,
பாடல்கள்
என
பொன்னியின்
செல்வன்
படக்குழு
இணையத்தை
அலறவிட்டு
வருகிறது.
மேலும்
படத்தின்
பிரமோஷன்
டூரையும்
படத்தின்
நடிகர்,
நடிகைகள்
தற்போது
மேற்கொள்ளவுள்ளனர்.

சென்னையில்
துவங்கிய
பிரமோஷன்
டூர்
இன்றைய
தினம்
சென்னையில்
இந்த
பிரமோஷனல்
டூர்
துவங்கியுள்ளது.
தொடர்ந்து
தஞ்சை,
கேரளா,
பெங்களூரு,
டெல்லி,
துபாய்
என
அடுத்தடுத்த
இடங்களில்
கலக்கவுள்ளது
டீம்.
சென்னையில்
நடைபெற்ற
பத்திரிகையாளர்
சந்திப்பில்
பத்திரிகை,
தொலைக்காட்சி,
யூடியூப்,
ரேடியோ
என
அனைத்து
தரப்பினருக்கு
வரவேற்பு
கொடுக்கப்பட்டிருந்தது.

9
மாதங்களில்
2வது
பாகம்
ரிலீஸ்
இந்நிலையில்
இந்த
நிகழ்ச்சியில்
பேசிய
இயக்குநர்
மணிரத்னம்,
இம்மாதம்
30ம்
தேதி
பொன்னியின்
செல்வன்
பாகம்
1
வெளியாகவுள்ளதை
சுட்டிக்
காட்டினார்.
இதையடுத்து
பொன்னியின்
செல்வன்
படத்தின்
இரண்டாவது
பாகம்
9
மாதங்களில்
ரிலீசாகும்
என்றும்
அவர்
அப்டேட்
தெரிவித்துள்ளார்.