அச்சுறுத்தும் காய்ச்சல்…தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 37 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸை பொதுமக்கள் இலவசமாக செலுத்தி கொள்வதற்கான காலக்கெடு வரும் 30 ஆம் தேதியுடன் (செப்டம்பர் 30) முடிவடைய உள்ளது.

அதன் பின்னர் கொரோனா முதல், இரண்டாலது மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புவோர் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாகவோ, தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியோதான் செலுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிிகிறது. அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பூசி மெக கேம்ப் நடத்தப்படாது எனத் தெரிகிறது.

இவ்வாறு தொடர் தடுப்பூசி முகாம்கள் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இந்த முகாம்களும் விரைவில் முடிவுக்கு வர உள்னன. இந்த நிலையில் சுகாதாரம் தொடர்பான மற்றொரு பிரச்னை தமிழகத்தில் தலைத்தூக்கி உள்ளதால். அதுகுறித்து சிறப்பு முகாமை நடத்த வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃபுளூன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலுக்கு ஆளவோரில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும மாணவர்களாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரி்க்கை பலதரப்பிலும் எழுந்துள்ளது .ஆனால், தற்போது காலாண்டு தேர்வுகள் துவங்க உள்ளது என்பதாலும், ஏற்கெனவே அக்டோபர் 1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

அதேசமயம், இன்ஃபுளூயன்லா காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், காய்ச்சல், சளிககு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் ஆளாவதாலும், இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் நாளை (செப்டம்பர் 21) மொத்தம் 1,000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் இந்த முகாமிற்கு சென்று மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளை பெறலாம் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறையின் புள்ளிவிவரப்படி, இன்றைய தேதியில் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,166 பேர் இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காய்ச்சல் சிறப்பு முகாமுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.