இரவின் நிழலிலிருந்து சற்று வித்யாசமாக வெவ்வேறு லொகேஷனில் உருவான கிஷோரின் சிங்கிள் ஷாட் திரைப்படம்

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இயக்குநர் பார்த்திபன் இயக்கியிருந்த இரவின் நிழல் திரைப்படம் வெளியானது.

உலகின் முதல் நாந்லீனியர் திரைப்படம் என்ற அடைமொழியுட்டன் அந்தப் படம் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சிங்கிள் ஷாட் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இரவின் நிழல்

பல நாட்கள் ரிகர்சல் செய்து பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இறுதியாக ஒரு நாள் ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை எடுத்து முடித்ததாக பார்த்திபன் முன்னதாக கூறியிருந்தார். பல ஆண்டுகளாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணி புரிய வேண்டும் என்ற அவரது விருப்பம் அந்தப் படத்தில் நிறைவேறியது. அந்தப் படத்தில் வேலை பார்த்தது தனக்குத்தான் பெருமை என்று ரகுமான் கூறியிருந்தார்.

டிராமா

டிராமா

இந்நிலையில் நடிகர் நாசர் ட்ராமா என்கிற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட அதில் பார்த்திபன் கலந்து கொண்டார். டிராமா திரைப்படமும் சிங்கிள் ஷாட் மூவி என்றடாடையாளத்துடன் வெளியாவுள்ளது. இரவின் நிழல் ஒரே அரங்கத்தில் வெவ்வேறு செட்டுகள் போட்டு வெவ்வேறு காலக் கட்டத்தில் நடப்பது போன்று கதையம்சம் இருந்தது. சற்று வித்யாசமாக டிராமா திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்தால் இந்த படம் ஒரே காலகட்டத்தில் நடப்பதும் ஆனால் இன்டோர் அவுட்டோர் என்று பல இடங்களில் ஷூட் செய்துள்ளதும் தெரிய வருகிறது.

பொல்லாதவன் கிஷோர்

பொல்லாதவன் கிஷோர்

பொல்லாதவன் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை அஜு என்பவர் இயக்கியுள்ளார். ஜெய் பாலா மற்றும் காவியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட மொத்த பட குழுவினரும் 180 நாட்கள் ரிகர்சல் செய்து ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டில் பணிபுரின்ட்ஹுள்ளனர். கதைப்படி ஒரு போலீஸ் ஸ்டேஷனில் சிறிது நேரம் பவர் கட் ஆகும் போது நடக்கும் ஒரு கொலையை பற்றி விசாரிப்பதுதான் கதை என்று பட குழுவினர் கூறியுள்ளனர்.

தலைப்பிற்கு காரணம்

தலைப்பிற்கு காரணம்

“நாலு நிமிஷத்துல ஒரு கொலை” என்ற வாய்ஸ் ஓவருடன்தான் படத்தின் டிரைலரே ஆரம்பிக்கிறது. வழக்கமாக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள் ஒருமுறை ஆரம்பித்து விட்டால் அதன் போக்கில் நடிகர்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் ரீடேக் வாங்குவது போல மீண்டும் அந்த காட்சியையோ வசனத்தையோ திரும்ப பேசி நடிக்க முடியாது. அது போன்ற ஒரு முயற்சி இந்தப் படத்தில் இருந்ததால்தான் படத்திற்கு தலைப்பு டிராமா என்று வைத்துள்ளதாக பட குழுவினர் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.