ஷஹாரன்புர், :உத்தர பிரதேசத்தில், கபடி வீராங்கனையருக்கு கழிப்பறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டது தொடர்பாக, ‘வீடியோ’ வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷஹாரன்புரில் கடந்த மாதம் 16ம் தேதி, 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.இந்தப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனையருக்கு, விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிப்பறை வாயிலில் வைத்து உணவு பரிமாறப்பட்டது.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு, பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், மாவட்ட விளையாட்டு அதிகாரியை ‘சஸ்பெண்ட்’ செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்; மேலும் முழுமையாக விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார்.”மைதானத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. மேலும் மழை பெய்ததால், நீச்சல் குளம் அருகே உணவு சமைக்கப்பட்டது. அதன் அருகில், பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை அருகே உணவுப் பொருள் வைக்கப்பட்டது,” என, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுஉள்ளது.முழுமையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement