சின்ன வயசிலேயே நான் இந்திரா காந்தி தான் ; கங்கனா அதிரடி

அதிரடி கருத்துக்களுக்கும் துணிச்சலான முயற்சிகளுக்கும் பெயர் பெற்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான தலைவி என்கிற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவர். அதற்கு கிடைத்த பாராட்டுகள் கொடுத்த தைரியத்தில் தற்போது மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எமெர்ஜென்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். மறைந்த பிரதமர் இந்திரா காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட எமர்ஜென்சியை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கி வருகிறது.

இந்தப்படத்தில் இந்திராகாந்தியாக நடிக்கும் கங்கனாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தநிலையில் தனது சிறுவயது புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ள கங்கனா தன்னை சின்ன வயதிலேயே பார்ப்பதற்கு இந்திரா காந்தி போல இருக்கிறாய் என உறவினர்கள் கூறுவது வழக்கம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் முடிவெட்டிக் கொள்ள சலூனுக்கு செல்லும்போது, தன்னுடைய விருப்பப்படியே முடிவெட்ட சொன்னதாகவும் அந்த ஹேர்ஸ்டைலில் தன்னை பார்த்ததும் ராணுவத்தில் பணியாற்றும் தனது மாமன்கள் சிலர் அச்சு அசலாக இந்திரா காந்தி மாதிரி தான் இருக்கிறாய் என்று கிண்டலாக கூறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.