லண்டன், :மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகரான ‘குவீனின்’ பாடலை பாடி, லண்டன் ஹோட்டலில் பார்ட்டியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, கடந்த 8ம் தேதி காலமானார்.அவரது உடல் நேற்று முன் தினம் லண்டனில் அடக்கம் செய்யப்பட்டது. ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் லண்டன் வந்திருந்தனர்.
வட அமெரிக்க நாடான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், தங்கள் நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் லண்டன் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். ராணியின் இறுதி சடங்கு நடப்பதற்கு இருதினங்களுக்கு முன், 17ம் தேதி இரவு, கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு தங்கள் ஹோட்டலில் சிறிய பார்ட்டி நடத்தினர். இதில் ட்ரூடோ வும் பங்கேற்றார்.பிரிட்டனை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகரான மறைந்த, ‘குவீன்’ என்றழைக்கப்படும் ப்ரெடி மெர்குரி பாடிய, ‘பொஹீமியன் ராப்சோடி’ என்ற பாப் ஆல்பத்தில் வரும் பாடல்களை ஜஸ்டின் ட்ரூடோ அந்த பார்ட்டியில் சத்தமாக பாடும், ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வெளியானது.
நாடே துக்கம் அனுசரிக்கும் நேரத்தில், ஹோட்டலில் பார்ட்டி கொண்டாடிய ட்ரூடோவின் செயல், சமூகவலைதளத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.மேலும், ராணியின் மரணத்தின் போது பாடகர் குவீன் பாடிய பாடலை பாடியது ராணியை அவமதிக்கும் செயல் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement