வெற்றிமாறனை திட்டிய பாரதிராஜா… காரணம் தெரியுமா?

சென்னை: அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்நநர் வெற்றிமாறன் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை.

புதிதாக தேர்வாகியுள்ள போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் சூரி அதில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து தான் திட்டு வாங்கியதாக வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விடுதலை

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தான் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சூரிதான் கதாநாயகன் என்பதை முடிவு செய்து விட்டாராம் வெற்றிமாறன். அதனால் விடுதலை படத்திற்காக வேறு எந்த கதாநாயகனையும் தேர்வு செய்யவில்லை. சூரிக்காகத்தான் விடுதலை படம் என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் எளிய மக்களின் கதையை பற்றித்தான் அவரை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்று இருந்த வெற்றிமாறன் சூரியை நேரில் சந்தித்தபோது தன்னை மற்றவர்கள் முனமவர் காட்டிக் கொள்ளும் விதத்தை பார்த்து பின்பு வேறு படம் செய்யலாம் என்று துவங்கப்பட்டது தான் விடுதலை திரைப்படமாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் அவரது உடல் வாகு இருந்தது இந்தப் படத்திற்கு பலமாக அமைந்துவிட்டதாம்.

வாத்தியார் விஜய் சேதுபதி

வாத்தியார் விஜய் சேதுபதி

விடுதலை படத்தில் வாத்தியார் என்கிற கதாபாத்திரம் இருக்கிறது ஒரு எட்டு நாட்கள் மட்டும் தேவைப்படும் என்று விஜய் சேதுபதியிடம் வெற்றிமாறன் கேட்க உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டு கால் ஷீட் கொடுத்தாராம். ஆனால் 45 நாட்கள் அவரை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று

வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகவே, அமீர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் தான் விடுதலைப் படத்திலும் நடந்துள்ளது.

திட்டிய பாரதிராஜா

திட்டிய பாரதிராஜா

முதலில் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு பாரதிராஜாவிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி இருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் படத்தில் இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது நடித்தால் நீங்கள் தான் சிரமப்படுவீர்கள் என்று அவரிடம் அனுமதி பெற்ற பின்னர்தான் அந்தக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ததாக வெற்றிமாறன் கூறியுள்ளார். முன்னதாக பாரதிராஜாவிற்கு தலை முடியை வெட்டி டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்தாராம். அதனால்தான் வெற்றிமாறன் இந்த விஷயத்தை கூறிய போது முதலில் பாரதிராஜா திட்டி விட்டு பிறகு வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு சம்மதித்தார் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.