சென்னை : எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் எச் வினோத் ட்விட்டரில் படம் நின்னு பேசும் என பதிவிட்டுள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டப்பார்வை, வலிமை படத்தை இயக்கிய எச் வினோத். தற்போது அஜித்தின் 61வது படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கிறார்.
வலிமை
எச் வினோத் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல் படத்தில் அம்மா, தம்பி சென்டிமென்ட் தூக்கலாக இருந்தது. இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயன் ஆகியோர் நடித்திருந்தனர். வலிமை படத்தை அடுத்து எச் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார்.

வலிமை
துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. அதில், வெள்ளை தாடி,மீசையுடன் நாற்காலியில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மிரட்டலாக இருக்கிறார் அஜித். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்கு துணிவு என்ற தலைப்பு மிகவும் பொருத்தமான டைட்டிலாக அமைந்துள்ளது.

படம் நின்னு பேசும்
அஜித்தின் 61வது படத்திற்கு என்ன தலைப்பாக இருக்கும் என்று சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமே நடந்து வந்த நிலையில், பக்காவான பெயர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எச் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்வை வெளியிட்டு “படம் நின்னு பேசும்…கவலைப்படாதீங்க” என ட்வீட்போட்டுள்ளார்

அரைமணிநேரத்தில் பேனர்
துணிவு படத்தின் டைட்டிலை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். சாதாரண வேலை நாள்ல பர்ஸ்ட் லுக் 30 mtsல ஃப்ளெக்ஸ் பேனர் ரெடி, தல ரசிகர்கள் ஆன்லைன் மட்டும் இல்ல ஆஃப் லைன்ல மொரட்டு சம்பவம் பண்றாங்கப்பா. அஜித்துனா சும்மாவா என்ன.

அஜித் 62
துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் அஜித்தின் 62வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.