புவனகிரி: புதுச்சேரி மாநிலத்திலிருந்து மயிலாடுதுறைக்கு நேற்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு என்ற கிராமத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பெண்கள் பலியானார்கள். காயமடைந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.