'இலங்கையரின் புன்னகையை பாதுகாத்தல்'

‘இலங்கையரின் புன்னகையை பாதுகாத்தல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையில் சுற்றுலாதுறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று சுற்றுலாத்துறை அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் பருவகாலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை வருமானமாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக விடயத்தான அமைச்சர் ஹரிண் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் விசேடமாக   Swiss air, Asus air, Aeroflot from Russia, and Air France  ஆகியவை தமது விமான சேவை வலைப்பின்னலை இலங்கையின் ஊடாக விரிவுப்படுத்தவுள்ளன. இதன்மூலம் இலக்கை அடைய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
‘இலங்கையரின் புன்னகையை பாதுகாத்தல்’ என்ற இந்த தொனிப்பொருளிலான நடவடிக்கை முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், யூடிப் சேனல் ஊடாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.