உள்நாட்டு சினிமாவின் விருத்தி: பாராளுமன்ற குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு உறுப்பினர்கள் கோரிக்கை

உள்நாட்டு திரைப்பட கைத்தொழில் முகண்கொடுத்துள்ள நிலைமை மற்றும் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள நிறுவுதல், முன்னுரிமை அவனமொன்றை தயாரித்தல், பார்வையாளர்களின் ஈர்ப்பை 1971 – 1979 காலப்பகுதி காலப்பகுதியைப் போன்று மீண்டும் ஸ்தாபிப்பது போன்ற விடயங்களை கருத்தில்கொள்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கடிதமொன்று இன்று (23) கையளிக்கப்பட்டது.

பாரம்பரியமான திரைப்பட முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறைமையினால் கிடைக்கும் முன்னேற்றங்களுக்கு அமைய உள்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பின்னரான செயற்பாடுகளை இற்றைப்படுத்துவது அத்தியாவசியமானது என பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கையொப்பமிட்டு வழங்கியுள்ள இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு சினிமாத் துறைக்குப் பிரவேசிக்க விரும்பும் மற்றும் திறமைகளை வெளிப்படுத்து இளம் தலைமுறையினருக்கு முழுநேர அரச அனுசரணையுடனான சினிமாக் கல்லூரியொன்றை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் கொள்கையின் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய தொழில்துறையாளர்களை உருவாக்குவதற்குப் பல்லைக்கழகங்கள் காணப்பட்டாலும் சினிமா மற்றும் தொலைக்கட்சி ஊடகம் பற்றிய முழுநேரக் கல்விக்கு இந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்று இல்லாததன் குறைபாடும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச  திரைப்படத் தயாரிப்பு மற்றும்விநியோகம் திரையரங்களுகளுக்கு மேலதிகமாக ஏனைய ஊடகங்கள் வாயிலாக உள்ளிட்ட ஏனை ஒ.ரி.ரி தளங்களில் ஒளிபரப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், அவ்வாறான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் விடயங்களை ஆராய்ந்து அது குறித்த அவதானிப்புக்கள் மற்றும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கக் கூடிய விசேட குழுவொன்றை அமைக்குமாறும் கடிதம் மூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.