இணைப்பு சாலை இல்லாததால் 11 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் உப்பனாறு பாலப்பணி: 30 மீனவ கிராம மக்கள் அவதி

சீர்காழி : சீர்காழி அருகே 11 ஆண்டுகளுக்கு முன்புபாலம் கட்டியும், இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் முதல் பழையார் தொடுவாய் திருமுல்லைவாசல் கீழமூவர்கரை பெருந்தோட்டம் பூம்புகார் வானகிரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இடையே தொடர்ச்சியாக பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் மீனவர்கள் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் மீனவர்கள் பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 2007 ஆண்டு திருமுல்லைவாசல் கீழமூவர்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் உபபனாற்றில் புதிய பாலம் கட்ட சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ 42 .59 கோடி ஒதுக்கப்பட்டு சுமார் 1. கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் பணி தொடங்கி 2010 முடிவடைந்தது. ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பாலத்தின் இரண்டு பக்கங்களில் இணைப்பு சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பாலம் கட்டியும் பொதுமக்கள் மீனவர்கள் பயன்படுத்த முடியாமல் கடந்த 11 ஆண்டுகளாக பாலம் மட்டும் தனியாக அந்தரத்தில் தொங்கியவாறு காட்சி அளித்து வருகிறது.

இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் பழையார் கூழையார் தொடுவாய் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்களை விற்பனை செய்ய சுமார் 20 கிலோமீட்டர் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனனர். புதிய பாலம் கட்டி 11 ஆண்டுகள் கடந்து விட்டதால் பாலம் பராமரிப்பு இல்லாமல் சேதமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இணைப்புச் சாலைகள் அமைய உள்ள இடங்களில் இடத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் பிரச்சனை இருந்து வருவதால் இணைப்புச் சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்த சிக்கல்கள் தொடர்ந்து இருந்து வருவதாக தெரிகிறது.

இணைப்பு சாலை அமைக்க தேவைப்படும் இடத்தின் உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப உரிய தொகையை வழங்கி இணைப்புச் சாலை அமைத்து பல ஆண்டுகளுக்கு முன்புகட்டி முடிக்கப்பட்டு இருக்கும். தொடர்ந்து அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பாலத்தை பார்வையிட்டு செல்கின்றன. ஆனால் பாலம் முழுமை பெறாமல் இருந்து வருகிறது பாலத்தில் போக்குவரத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.