ஓசி பயணம் வேண்டாம் – டிக்கெடு கொடு! தெறிக்க விட்ட மூதாட்டி – வைரல் வீடியோ…

சென்னை: இலவச பேருந்தில், ஓசி பயணம் வேண்டாம்,  காசு கொடுக்கேன் டிக்கெட் கொடு என 80 வயது மூதாட்டி பேருந்து நடத்துனரிடம் விவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அரசு பணியில் உள்ள பெண்களே பெரும்பாலும் இலவச பேருந்து பயணத்தை உபயோகப் படுத்தி வரும் நிலையில், அன்றாடங்காய்ச்சியான முதிய பெண்மணி ஓசி பயணம் வேண்டாம், காசு கொடுக்கேன் டிக்கெட்டு  என அனல் தெறிக்க பேசும் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த பேருந்துகள் பெரும்பாலாம நகர்ப்புறங்களிலேயே அதிக அளவில் இயக்கப் படுகிறது. மேலும், பணி நேரத்தின்போதுதான் அதிக பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், இந்த இலவச பேருந்துகளின் சலுகையை அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ளவர்களே அனுபவித்து வருகின்றனர். ஆனால் கிராமப்புற ஏழைகளும், அன்றாடங்காய்ச்சி களுக்கும்  இலவச பேருந்து பயணம் கனவாகவே தொடர்கிறது.

இநத் நிலையில், இலவச பேருந்தில்  பயணிக்கும் மூதாட்டி ஒருவர், நான் ஓசியில் வர மாட்டேன் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிதான் பயணிப்பேன் என பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவீடியோவில், பேருந்துநடத்துனர், இது இலவச பேருந்து, காசு வேண்டாம் என்று கூறியும், அதை ஏற்க மறுக்கும் மூதாட்டி, ஓசி பயணம் எதுக்கு, எனக்கு காசுக்கு டிக்கெட் கொடு, தமிழ்நாடே இலவசமாக சென்றாலும், நான் ஓசியில் செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறுகிறார்  என தெறிக்க விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகஅரசு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டு, அதன்மூலம் பல கோடி இழப்பை சந்தித்து வரும் நிலையில், மூதாட்டியின் தில்லான பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி,  “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்.” என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.