கடலூர் அருகே இன்று அதிகாலை பரபரப்பு: இந்து முன்னணி ஆதரவாளர் வீடு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் வசித்து வருபவர் சீனு என்கிற ராமதாஸ். இவர் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ராம ஹனுமான் கோயிலின் அறங்காவலராக உள்ளார். இந்து முன்னணி ஆதரவாளரான இவரின் வீட்டின் முன்பு இன்று அதிகாலை மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை  வீசியுள்ளனர். இதில் ஒன்று வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தின் மீது மோதி கீழே விழுந்து உடைந்துள்ளது.

மற்றொரு பாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பழைய ஜீப்பின் பேனட் மீது விழுந்தது. இதில் ஜீப் பேனட் லேசாக தீப்பிடித்து சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஏதேனும் சிசிடிவி இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிப்பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு பாஜக ஒன்றிய தலைவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.