கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கார்த்திக் குமார் திடீர் ராஜினாமா.!

பீஹாரில் கடத்தல் வழக்கில் சிக்கிய சட்ட அமைச்சர் கார்த்திக் குமார் இலாகா மாற்றப்பட்ட சிலமணி நேரங்களில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் கார்த்திக் குமார் மீது, கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது, அவர் பதவியில் நீடிக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அவரை சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கரும்புத் துறைக்கு மாற்றினார்.தனது இலாகா மாற்றிய சில மணி நேரங்களில் … Read more

ஆசிய கோப்பை: ஹாங்காங் அணியை வீழ்த்தியது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கனேடிய மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித் மற்றும் அவரது நிர்வாகக் குழுவை ஆதரிப்பதாக… பெடரல் அரசும் கனேடிய மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். ஹொக்கி கனடாவின் தலைமையின் மீது பெடரல் அரசு மற்றும் கனேடிய மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். அதை உணர்ந்துகொள்ள நிர்வாகிகள் தரப்பு தாமதிக்கும் என்றால், அது மேலதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார். ஹொக்கி … Read more

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு நோட்டீஸ் : ஐகோர்ட் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நீதிபதி உத்தரவு

விழுப்புரம்:  தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை நடக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,494,797 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,494,797 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 607,775,247 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 583,757,288 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,061  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் திருப்பம் 12 ஆளும் கட்சி எம்பி.க்கள் எதிர்கட்சிக்கு திடீர் தாவல்

கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்பி.க்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அதிருப்தியடைந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 எம்பிக்கள் தனியாக செயல்பட தொடங்கினர். மக்கள் போராட்டம் வலுத்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா … Read more

அபுதாபியில் ஹிந்து கோவில்: அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி : ”ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழ்ந்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று அந்த … Read more

என்னால ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து ஆகல… சேது ஹீரோயின் பரபரப்பு பேட்டி

சென்னை: சேது திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர், அறிமுகமானவர் நடிகை அபிதா எனும் ஜெனி. அதன் பின்னர் திருமதி செல்வம் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்கள் மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விட்டார். சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகியோரின் விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சேது சேது திரைப்படத்தின் போது கதாநாயகிக்கான தேர்வு நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட நடிகை ஜெனியின் நடிப்பு … Read more