தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்களை படையலிடுவது வழக்கம். நிறுவனங்களில் ஆயுத பூஜை வேலை நாட்களில் தொழிலாளர்களோடு கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்றே பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு படையலிட்ட சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பேரூர் சிறுவாணி சாலை பூலுவபபட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய மைல் கல்லை எடுத்து புதிய மைல்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் வாழை இலையில் படையல் வைத்து வழிபாடும் நடத்தினர்.
ஆயுத பூஜையையொட்டி மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி, வாழை மரக்கன்றுகள் கட்டி, சந்தன பொட்டு, திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுநடத்தினர்.
newstm.in