மர்ம தேசம் தொடரில் நடித்தவர் தற்கொலை!!

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட நாடகங்களில் நடித்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் வெளியான ஜீ பூம்பா, மர்ம தேச தொடர் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 90ஸ் கிட்ஸ்களை பீதியடையவைத்த தொடர்களின் பட்டியலில் எப்போதும் ஜீ பூம்பா, மர்ம தேச தொடர்களுக்கு இடம் உண்டு.

இந்த இரண்டு தொடர்களிலும் நாயகான நடித்தவர் லோகேஷ். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். சிறுவனாக இருந்த போது நிறைய படத்தில் நடித்திருந்தாலும் வளர்ந்த பிறகு அவருக்கு பெரியபட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால், சினிமா துறையில் சிறிய சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் 6 அத்தியாயம் என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

காஞ்சிபுரம் மாடம்பாக்கத்தில் தனது தாய் தந்தையுடன் லோகேஷ் வசித்து வந்தார். இவருக்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆனால் அண்மையில் அவரது மனைவி விவாகரத்து கேட்டு லோகேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் லோகேஷ் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு வந்த லோகேஷ் விஷம் குடித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்தபோலீஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 நாள் சிகிச்சையில் இருந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.