தனுஷ், ஐஸ்வர்யா இருவர் குறித்தும் இணையத்தில் பரவும் செய்தி; உண்மை என்ன?

நேற்று தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் மனமொத்து வாழப்போகிறார்கள். ரஜினிகாந்த் இருவரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதுகுறித்து தனுஷிற்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். நம்பிக்கைக்குப் பாத்திரமான இருதரப்புக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த விபரம் இதுதான்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாகவே வசிக்கிறார்கள். வார நாட்களில் குழந்தைகள் ஐஸ்வர்யாவிடமும், சனி ஞாயிறு தனுஷிடமும் இருக்கிறார்கள். இதற்கு முன்னால் பல முறை தனுஷ், ஜஸ்வர்யாவிற்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் அவை ஏதும் வெற்றியடையவில்லை. நிலைமைகள் சீரடைந்து நடைமுறைக்கு வரலில்லை. தொடர்ந்து அவர்கள் தனித்தனியாகவே வசிப்பார்கள் என்றும், தேவையின் பொருட்டு செல்லும் இடங்களுக்குக் குழந்தைகளின் பொருட்டு செல்வார்கள் என்று சொல்கிறார்கள்.

ஐஸ்வர்யா, தனுஷ்

இப்போது இருவரும் சேர்ந்துவிட்டார்கள் என்று உலவுகிற செய்திகள் உண்மையானவை அல்ல. இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு கோரும் எண்ணமும் இல்லையாம். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லையாம். இந்த உண்மைகளை தெரியாத யாரோ சிலரால் பரப்பிவிடப்பட்ட செய்திதான் இது என்று தீர்மனமாகச் சொல்கிறார்கள் அவரது நண்பர்கள். இதுதான் சரியான தகவல் என்றும் சொல்கிறார்கள். பிரிந்தது பிரிந்தது என்று செய்தி மட்டுமே உண்மையாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.