ஓஸ்லோ-பெலாரஸ் நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளை தவிர இதர துறைகளுக்கான பரிசுகள் கடந்த 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அந்நாட்டில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை எதிர்த்து போராடி வரும் இவர், தற்போது பெலாரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை தவிர, இரண்டு மனித உரிமை அமைப்புகளான, ‘ரஷ்யன் குரூப் மெமோரியல்’ மற்றும் உக்ரைன் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகியவற்றுக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement