கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், கடந்த வருடம் 12 அரச பல்கலைக்கழகங்களுக்கு 89 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.
தேசிய வானொலியின் நிகழ்ச்சியில் நேற்று (08) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவன் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் ஆரம்ப கல்வியாண்டில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர்களை சமூகப்படுத்தும் முதன்மை கலாச்சாரமாக உள்ளது. ஆனால் தற்காலத்தில் பகிடிவதை, உடல், உள, பாலியல், சமூக, அரசியல், இனமத ரீதியான வன்முறையாக உருவெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.