காங்கிரஸ் மூத்த தலைவரும், பேச்சாளருமான குமரி அனந்தன், சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தனிவார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.