தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, வனப்பகுதியில் இரும்பு வியாபாரி, மர்மநபர்களால் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
வட்டாலூரை சேர்ந்த இரும்பு வியாபாரி முத்து ராமலிங்கராஜன் என்பவரின் வீட்டிற்கு நேற்றிரவு வந்த மர்மநபர்கள், பூலாங்குளம் வனப்பகுதிக்கு அவரை அழைத்து சென்றதாகக்கூறப்படுகிறது.
அங்கு மது வாங்கி கொடுத்து, முத்து ராமலிங்கராஜனை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் தப்பியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.