காலி மீன்பிடித் துறைமுகத்தில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள அமோனியா வெளியேற்றம் உட்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் ஐஸ் தொழிற்சாலையை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (10) இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், ஐஸ் தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.