“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது
மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு
அவன் தேவையில்லை என்றும் பொலிஸாரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார்
ஒப்படைத்துள்ளார்.
நீதவானின் பணிப்புரை
இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான்.
அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான்
பணித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனையில் அதிகளவான மாணவர்கள்
சிக்குண்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தாமாக சுயவிருப்பில்
மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.