திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவிநாசி அடுத்த சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி குடும்பத்தினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென இன்று அதிகாலை நேரத்தில் வீடு இடிந்து விழுந்துள்ளன. இதில் பழனிசாமி மற்றும் அவரது மனைவி கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
மேலும் கலாவின் தாயார் மாகாளி(70) பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.