மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 10ம் வகுப்பு சான்றிதழ் பெறும் தேதி வெளியானது..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ – மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மாணவ – மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில் வரும் 14-ம் தேதி காலை 10 மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.