தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததால், அறிக்கையை திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுதல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் பணிக்கு தனித்தனி குழுக்களை அமைக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.