ஆளுநரை திரும்பப் பெற சபையில் தீர்மானம்? -பற்றவைத்த விசிக; ஸ்டாலின் முடிவு என்ன!

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்றாற்போல், தமிழக ஆளுநராக ஆர்.என்,ரவி பதவியேற்ற கடந்த ஓராண்டில் அவருக்கும், ஆளும் திமுகவுக்கு எப்போது பார்த்தால் உரசல் போக்கே இருந்து வருகிறது.

பொதுவெளியில் சனாதன தர்மம் குறித்து பேச்சு, திருக்குறளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்று விமர்சனம், திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல என்று பேசுவது, ஆளுநர் மாளிகையில் ரஜினியுடன் அரசியல் பேச்சு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும், செயல்பாடும் பெரும்பாலான நேரங்களில் தங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சீண்டுவதாகவே இருப்பதாக ஆளும் திமுகவின் உடன்பிறப்புகள் குமுறி கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் நீட் தேர்வு விலக்கு கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்காமல், மாதக்கணக்கில் தமது மாளிகையிலேயே வைத்திருந்தது, சில மசோதாக்களை கிடப்பில் போட்டிருப்பதற்கான காரணத்தை மாநில அரசுக்கு சொல்வதற்கு முன்பே அதுகுறித்து ஊடகங்களுக்கு வான்ட்டடாக பேட்டி அளித்தது என்பன போன்ற காரணங்களாலும் ஆளும் தரப்பு ஆளுநர் மீது செம கடுப்பில் இருப்பதாகவே தெரிகிறது.

இப்படி கொள்கைரீதியாகவும், அரசு நிர்வாகரீதியாகவும் திமுகவுக்கும்,

தலைமையிலான திமுக அரசுக்கும் ஆளுநர் நெருக்கடி தந்துவருவதாகவும், எனவே மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரி. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த ஏப்ரல் மாதம் கவனஈர்ப்பு நோட்டீஸ் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அத்துடன், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது மாளிகையில் அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,

, கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை புறக்கணித்தன.

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பேசிய ஆளவநர் ரவி, “திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால் அதனை சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்” எனப் பேசியது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரின் இந்தப் பேச்சை, திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடுமையாக கண்டித்துள்ள நிலையில், ஆளுநர் திரும்பப் பெற கோரி, விரைவில் கூடவுள்ள ச்ட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சியான விசிக வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரே பாரதம் ஒரே பண்பாடு என்ற பெயரில் கருத்தரங்கத்தை ராஜ்பவனில் நடத்துகிறார் ஆர்.என்.ரவி அவர்கள். ஆளுனர் மாளிகை என்பது #RSS கொள்கைகளை செயல்படுத்தும் அலுவலகமல்ல. தமிழ்நாட்டு மக்களின் நலனை,உரிமைகளை பாதுகாக்க தங்கி பணி செய்யும் இடம்.

ஆனால் ஆளுனரான ரவி அவர்கள் அதை தவிர மற்ற சங்கத்துவ பணிகளை செய்வது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். ஆகவே, வரும் 17 ம்தேதி கூடவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரை வெளியேற்றக்கோரி தீர்மானம் இயற்ற வேண்டும்” ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வன்னி அரசு.

விசிகவின் இதே கோரி்க்கையை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் எழுப்பும் நிலையில், அதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிச்சயம் எதிர்க்கும் என்பதால், அடுத்த வாரம் கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.