அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ டிலோச் என்ற நடனக்கலைஞர், இசையின் வேகத்திற்கு ஏற்ப சுழன்று ஆடிய காட்சி, இணையதளங்களில் பரவி வருகிறது.
நியூயார்க்கை சேர்ந்த இவர், நடனம் சார்ந்த பல வீடியோக்களை, இணையதளங்களில் வெளியிட்டு பிசியாக இருப்பவர். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடன வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இசையின் வேகத்திற்கு ஏற்ப, ஒற்றைக்காலில் நின்று, மேத்யூ சுழன்று ஆடியது, அனைவரையும் கவர்ந்து வருகிறது. 20 விநாடிகளில் 45 முறை மேத்யூ சுழன்று ஆடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.