புதுடில்லி:”இட ஒதுக்கீட்டின் முழுமையான பலன்கள் சமூகத்தின் அடித்தட்டு வரை இன்னும் சென்று சேரவில்லை,” என, தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
தேசிய மனித உரிமை ஆணைய நிறுவன நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில், மனித உரிமை கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண்குமார் மிஸ்ரா பேசியதாவது:
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சமூக பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், இதைவிட உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்பினருக்கு ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இட ஒதுக்கீட்டின் முழுமையான பலன்கள் சமூகத்தின் அடித்தட்டு வரை இன்னும் சென்று சேரவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement