
கோவாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29 கே விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானி பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறினார். விரைவான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையால் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.
விபத்து குறித்து விசாரிப்பதற்காக குழு அமைத்து உத்திரவிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து மிக் 29 கே ரக விமானத்தின் 4 வது விபத்து இதுவாகும்.