சேலம் மாவட்டத்தில் மனைவியை இரும்புராடால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி வேலுநகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (40). இவரது மனைவி கார்த்திகை செல்வி (35). இவர்களுக்கு பலசத்யா(10) என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிறுமி பலசத்யா கண் விழித்து பார்த்த போது, தாய் கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து தந்தையை தேடிய போது அவர் காணவில்லை என்பதால், அதிர்ச்சியடைந்த பாலசத்யா, அருகில் இருந்த உறவினர்களிடம் கதறி அழுதவாறு இதுகுறித்து கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓடி வந்த உறவினர்கள், இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் கார்த்திகை செல்வியை இரும்பு ராடால் அடித்து கொன்று விட்டு கணவர் ராஜசேகரன் தலைமறைவானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் கார்த்திகை செல்வியின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தலைமுறைவான ராஜசேகரனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.