நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 9ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற பிளஸ் 1 மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அரசு பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவன், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பள்ளி வளாகத்திற்கு அருகே வைத்து அந்த மாணவிக்கு, மாணவன் தாலி கட்ட முயன்றுள்ளார்.
இதனை சுதாரித்துக்கொண்ட மாணவி கூச்சலிட்டபடி ஓடியதால், பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பியோடிய சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் அவனது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.