சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேகரித்த பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 – 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 104 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தமை இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தக் கணக்கிலிருந்து 81 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.