புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திற்கு பதிலாக புதியதொன்றை மாற்றுதல் ஆகியவற்றிற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனஇதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.