திருத்தணி: வள்ளூர் மாவட்டத்தில் மே 2021 முதல் தற்போது வரை 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என, பால்வளத் துறை மைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அளவில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடந்த இந்த நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில், பள்ளி மாணவிகள், பெற்றோர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்வில், அமைச்சர் தெரிவித்ததாவது: ருவள்ளூர் மாவட்டத்தில் மே-2021 முதல் தற்போது வரை 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 35 குழந்தை திருமணங்கள் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் நடைபெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. துமக்கள், குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் ரிவித்து, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும். வ்வாறு அவர் தெரிவித்தார். ந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருத்தணி கோட்டாட்சியர் ஹஸ்வத் பேகம் மற்றும் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தங்கதனம் (திருத்தணி), ரஞ்சிதா (ஆர்.கே.பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.