தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.எல்.தேரியில் நதி நீர் இணைப்பு திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட சபாநாயகர் அப்பாவு, பாலம் கட்டாமலேயே பணிகள் முடிவுற்றதாக கூறிய நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளரை கடிந்து கொண்டார்.
12 கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்பில் 4,300 மீட்டர் நீளத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்ட பணிகளில், கால்வாய் அமைக்கும் பணியை அப்பாவு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பாலம் கட்டப்படாததை கண்டறிந்த அப்பாவு, என்னை ஏமாற்றவா பாக்குறீங்க… இதை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.