முகப்பொலிவுக்கு உருளைக்கிழங்கு இப்படி பயன்படுத்தி பாருங்க! விரைவில் பலன்


பொதுவாக நாம் சாம்பார் போன்றவற்றிற்கு பயன்படுத்து ஒரு உணவுபொருள் தான் உருளைக்கிழங்கு.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.

குறிப்பாக உருளைக்கிழங்கு சாறு தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.  

முகப்பொலிவுக்கு உருளைக்கிழங்கு இப்படி பயன்படுத்தி பாருங்க! விரைவில் பலன் | Removed My Dark Spots Potato Face Pack

  • உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பஞ்சால் உங்கள் முகத்தில் தடவவும். சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை முகத்தில் தடவலாம்.
  • முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு சாறு கொண்டு ஒரு கலவையைத் தயாரிக்கவும். இப்போது இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவவும். அது காய்ந்து போகும் வரை அப்படியே விட்டு விடவும். உங்கள் முகத்தில் இந்த கலவை காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
  • ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு சாறை சேர்க்கவும். இதை முகத்தில் தடவி அப்படியே சில நிமிடங்கள் இருக்க விடவும். பின்னர் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். இப்படி செய்வதன் மூலம், முகத்தின் கரும்புள்ளிகள் அகற்றப்பட்டு, உங்கள் முகம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.