முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் 2,863 வாகனம் பழுதுபார்க்கும் கெரேஜ்கள் மற்றும் அதுபோன்ற இடங்களைப் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாணத்தின் 126 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய 2863 வாகனம் செப்பனிடும் கெரேஜ்கள் மற்றும் அதுபோன்ற இடங்களின் 2000 க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.