வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே கருணை இல்லம் ஒன்று நடந்து வருகிறது. இந்த கருணை இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், முறையாக உணவு வழங்குவது இல்லை என்றும் புகார் அளித்தனர்.
இதையடுத்து அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, நடந்த ஆய்வில் அங்குள்ள முதியவர்களுக்கு சரியாக உணவு வழங்காததும், பாரமரிக்காததும் தெரிய வந்தது.
அதன் பின்னர், அங்குள்ள முதியவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, அந்த முதியவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த கருணை இல்லத்துக்கு சீல் வைக்க காட்பாடி வட்டாட்சியர் ஜெகனுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.