இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை


இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் மண்சரிவு  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அடுத்த 24 மணிநேரத்துக்கு  இந்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள, வலல்லவிட்ட, பாலிந்த நுவர மற்றும் தொடங்கொட ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது.

இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை | Warning For Several Districts

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரி எல்ல, பெல்மதுளை, கலவான, நிவித்திகல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.