கடலூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டவர் மீது 3 தினங்கள் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறவன் பாளைத்தை சேர்ந்த சிவமணி என்பவர் தவறாக நடந்ததால் உறவுக்கார சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் சிறுமியின் தாயும் தாய்மாமனும் அவரது நண்பரும் சேர்ந்து சிவமணியை கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் மூவர் சிறையில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் சிவமணி மீது புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் கொலை செய்யப்பட்ட சிவமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது