கோவை: கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை பாஜக அலுவலகம் மீது கடந்த 22-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
