
சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜை இயக்க உள்ளார். மாதம்பட்டி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தற்போது கேசினோ எனும் படம் மற்றும் நடிகர் யோகிபாபு உடன் இணைந்து பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் ரங்கராஜ், அதனை முடித்ததும் சீனு ராமசாமி படத்தில் இணைய உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. டிசம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.