பாகிஸ்தானில் பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நூரியா பாத் பகுதியில் நேற்று (12) நள்ளிரவு 60 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பஸ்ஸில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ்சை சாரதி உடனடியாக நிறுத்தினார். ஆனாலும் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியதில் பஸ்சுக்குள் இருந்த குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த 40 க்கும் மேற்பட்டோரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்ஸில் பிடித்த தீயை அணைத்துள்ளனர்.
மேலும் பஸ்சில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.