சில்ஹெட்: வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் 8வது மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
ஏழு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.
இன்று (அக்.,13) நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், தாய்லாந்து அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களும் எடுத்தனர்.
சற்று கடின இலக்கை துரத்திய தாய்லாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சில் திணறின. அந்த அணியின் கேப்டன் சாய்வய் (21), நட்டயா பூச்சதம் (21) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இறுதியாக 74 ரன்களுக்கு தாய்லாந்து அணி சுருண்டது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 37 ரன்களுக்கு இந்திய வீராங்கனைகள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement