'வறுமையிலிருந்து SAMSUNG  வரை கொரியாவின் அபிவிருத்தி மாதிரிகள் பற்றிய ஒரு வினா' நூல் நாளை வெளியீடு

‘வறுமையிலிருந்து SAMSUNG வரை கொரியாவின் அபிவிருத்தி மாதிரிகள் பற்றிய ஒரு வினா’ நூல் நாளை வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக் ஷ மற்றும் எழுத்தாளர் சானுக வத்தேகம ஆகியோர் இணைந்து சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளனர்.

இது தெடர்பான நிகழ்வு நாளை (14) காலை 10.00 மணியளவில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் விசேட விருந்தினராக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கையின் எதிர்கால பயணத்திற்காக புதிய அபிவிருத்தி தொடர்பான சமூக மற்றும் செயன்முறைக் கருத்துக்களை ஒன்று சேர்ப்பதற்கான பிண்ணனியில் இப்படைப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.