சமீபத்தில் திக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, “உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன்.
இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு பஞ்சவன். தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? தீண்டத்தகாதவர்களாக இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்? இந்த கேள்வியை நீங்கள் உரக்கச் சொன்னால்தான் சனாதனத்தை முறியடிக்க முடியும்.
சனாதனத்தை முறியடிக்கிற ஆயுதமாக திராவிடர் கழகம் இருக்கும்.” என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ” திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து மத வெறுப்பு பேச்சு இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆ.ராசா பேசியுள்ளார்.இதனால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கட்டுள்ளது.