சன்ரிபீட் ஷூ (தமிழ்)

யோகி பாபு, ப்ரியா கல்யாண், திலீபன், ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா ஆகியோர் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் நாளை (அக்டோபர் 14) வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படம் ‘ரிபீட் ஷூ’.
ஆற்றல் (தமிழ்)

விதார்த், சரிதா, வம்சி கிருஷ்ணா, சார்லி ஆகியோர் நடிப்பில் நாளை (அக்டோபர் 14) வெளியாகவுள்ள திரைப்படம் திரைப்படம் ‘ஆற்றல்’. இப்படத்தை இயக்குநர் கே.எல்.கண்ணன் இயக்கியிருக்கிறார்.
சஞ்ஜீவன் (தமிழ்)

விமல், திவ்யா துரைசாமி, நிஷாந்த் மற்றும் என்.ஜே.சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை மணிசேகர் இயக்கியுள்ளார். இப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
முகமறியான் (தமிழ்)

அறிமுக இயக்குநர் சாய் மோரா இயக்கத்தில் நடிகை புவிஷா நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘முகமறியான்’. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். திலீப் சர்மா மற்றும் திலீப் ஜெயின் இருவரும் தயாரித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் பி.திலீப் குமார் இப்படத்தில் வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Godfather (தெலுங்கு)

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மலையாள மெகா ஹிட் ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா, சத்ய தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனர்களில் ஆர்.பி.சௌத்ரி மற்றும் என்.வி.பிரசாத் இதைத் தயாரித்துள்ளனர். இப்படம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் சென்ற வாரம் வெளியான நிலையில், நாளை (அக்டோபர் 14) தமிழகத் திரையரங்குகளில் வெளியாகிறது.
Kantara (தமிழ், தெலுங்கு டப்பிங்)

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னட மொழியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற படம் ‘KANTARA’. ரிஷப் ஷெட்டியே நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு சனிக்கிழமை (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியாகிறது.
‘Chhello Show’ (Last Film Show) (குஜராத்தி)

அடுத்த ஆண்டு (2023) ஆஸ்கர் விழாவில் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (Last Film Show) தேர்வு செய்யப்பட்டுள்ளது. பான் நளின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் படச்சுருள்களில் திரையிடப்பட்ட சினிமா பற்றியும் அதைக் கனவாகக் கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கை பற்றியும் பேசுகிறது. இப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Varaal (மலையாளம்)

அனூப் மேனன் எழுத்தில் கண்ணன் தாமரக்குளம் இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘வரால்’. இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Doctor G (இந்தி)

ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா மற்றும் ஷீபா சத்தா ஆகியோர் நடிப்பில் அனுபூதி காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Doctor G’. இப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Code Name: Tiranga (இந்தி)

ரிபு தாஸ்குப்தா எழுத்து மற்றும் இயக்கத்தில் பரினீதி சோப்ரா மற்றும் ஹர்தவிந்தர் சிங் சந்து நடிப்பில் டி-சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபிலிம் ஹாங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் Code Name: Tiranga. இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Love You Loktantra (இந்தி)

அபய் நிஹலானி மற்றும் பிரசாந்தா சாஹூ ஆகியோரது இயக்கத்தில் கிருஷ்ணா அபிஷேக், அலி அஸ்கர், சப்னா சௌத்ரி நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘Love You Loktantra’. இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
Halloween Ends (English)

இயக்குநர் டேவிட் கார்டன் கிரீன் இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் Halloween Ends. உலகெங்கும் பேசப்பட்ட ‘ஹாலோவீன்’ படத்தொடரின் கடைசி பாகம் இது. இப்படம் நாளை (அக்டோபர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படைப்புகள்
The lie eater (Japanese – Netflix)

இத்திரைப்படம் ‘Netflix’ தளத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதி வெளியாகியிருக்கிறது.
Someone Borrowed (Portuguese – Netflix)

கயோ காஸ்ட்ரோ, தட்டி லோப்ஸ், பாட்ரிசியா ட்ரவாசோஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ‘Netflix’ தளத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதி வெளியாகியிருக்கிறது.
Blackout (English – Netflix)

இயக்குநர் சாம் மக்ரோனி இயக்கத்தில் உருவகியுள்ள இப்படம் ‘Netflix’ தளத்தில் கடந்த அக்டோபர் 12ம் தேதி வெளியாகியிருக்கிறது.